Monday, September 5, 2011

1. இயல்பான ஏழாவது அறிவு முன்னுரை




1. இயல்பான ஏழாவது அறிவு முன்னுரை

                நாம் வாழும் இவ்வுலகம் பரிணாம வளர்ச்சி நோக்கி நம்மை மேம்படுத்தி பூரணமாக்கும் பணியில் நாளும் போய்க் கொண்டிருக்கிறது. அந்த இயற்கை இலக்த்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த தெய்வீக பேருணர்வை மனிதப் பிறவியில் இயல்பான ஏழாவது அறிவைக் கொண்டு அறிவது இன்றியமையாதது.

                தன்னை அறிவதற்கே இப்பிறவியில் சிந்தனை செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளோம். இந்த சிந்தனையை புறப் பொருள்களின் மீது அதிக நாட்டம் கொண்டு வசதிகளை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றோம். புதிய கண்டுபிடிப்புக்கள் அதிகரிக்க நமது வசதிகளும் அதிகரிக்கின்றன. ஆனால் இவைகள் அனைத்தும் தகவல்களே அன்றி உண்மையறிவு ஆகாது. இதையே தலைமுறை தலைமுறையாக செய்து கொண்டு அறியாமையில் உழன்றுக் கொண்டு இருக்கின்றோம்.

                ஆறறிவு புறசிந்தனையாய் உண்மையான பயன் ஒன்றுமில்லை. இதிலிருந்து மேன்மை அடைய நம்மைப் பற்றிய அறிவு அவசியமாகின்றது. இந்த முயற்சியில் ஆறறிவை கடந்து ஏழாவது அறிவால் சிந்தனைகளை மேம்படுத்தி அகசிந்தனையாக உயர்த்த வேண்டும். இதனால் நம்மைப் பற்றிய பேருண்மையை அறியச் செய்கிறது. இந்த நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்குவதில் முழுபயனையும் அடைய முடியாது. அதை இயல்பாக ஏற்படுத்தும் முயற்சியே இயல்பான ஏழாவது அறிவாகும்.

                இந்நூல் ஓர் உன்னதமான விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும். சிந்தனையை மேம்படுத்தி தன்னை உணரவும் சீர்செய்து கொள்ளும் வழியை படிப்படியாக எடுத்துக்காட்டும். ஆறறிவின் மாற்றத்திற்கும் இயல்பான ஏழாவது அறிவுக்கும் ஓர் பாலமாக அமையும்.

                தன்னியல்பை அறிவதற்காக தேடுதலைத் தொடர்ந்து நடத்தப்படும் பயிற்சியே இயல்பு தியானம். இதனால் வாழ்க்கைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். எண்ணங்களின் தன்மை, அணுகுமுறை, புலன்களின் செயல் மாற்றத்தை அறிவீர்கள்.


                ``இயல்புணர்வால் இயல்பை இப்பிறவியில் அனுபவித்தறிவாய் நீயே’’.

- ... குழுவினர்

No comments:

Post a Comment