Monday, September 5, 2011

12. ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சி


12.  ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சி

                உடற்பயிற்சியினைப் பல்வேறு முறைகளில் செய்து வருகின்றனர். இவற்றில் பல குறிப்பிட்ட சில அவயங்களையோ, தசைகளையோ மட்டுமே சீரமைக்கின்றன. நமது நாட்டிலே இந்த உடற்பயிற்சியை ஒரு யோகமாகவே-யோகாசனம் என்கிற முறையில் பலவித ஆசனங்களை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்கள். இது உளப் பயிற்சிக்கு முன் உடற்பயிற்சி தேவை என்பதாகும். உடல் ஆரோக்கியம் செம்மையாக இருந்தால்தான் மனமும் வளமுற இருக்கும். ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வந்தோமாகில் நமது ஆன்மீகப் பயணமாகிய நலவாழ்க்கை சீராக இருக்கும் என்பது திண்ணம்.

                இந்த ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சியினை தினமும் காலை, மாலை 6.00 மணிக்கு 15 நிமிடங்கள் செய்தல் வேண்டும்.  இந்த ஆசனம், பிரணாயமம், மந்திரம், சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைந்து பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட முழுமையான சாதனாயாகும். இதனால் உடலில் உள்ள எல்லா சிற்றறைகளும் முறையாக இயங்கி, நாம் என்ன பணி செய்ய வேண்டுமோ அதற்கு ஒத்துழைத்து திறமை, வல்லமையை கொடுக்கின்றது. இது உடலை உறுதி செய்வது மட்டுமின்றி; உடலமைப்பின் இயக்கத்தைச் சீர்ப்படுத்தி உள்ளத்தையும், வலுவாக்குவதன் மூலம், வாழ்க்கையின் குறிக்கோள் தெளிவாக நம்மைப் பலவீனப்படுத்தி வந்த பழைய பதிவுகளிலிருந்து விடுதலை பெறும் மார்க்கமும் கிட்டுகின்றது. எனவே ஒருங்கிணைந்த எளிய முறையிலான இந்த உடற்பயிற்சித் தொடர் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அடிப்படையான வழியை அமைத்து தருகின்றது.

                இந்த ஒருங்கிணைந்த உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் தன்னை முழுமையாக உணர்தலும், தன்னை முழுமையாக அறிதலுமே ஆகும். இது மூன்று படிகளைக் கொண்டுள்ளது.

                முதல்படி : கால், கை, கண் தளர்வு செய்தல்.

                இரண்டாம்படி : பிரபஞ்ச ஒளிக்குரிய நம°காரம்.

                மூன்றாம்படி : உடம்பை தளர்வுறச் செய்தல்.

                ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்கு பிராணவாயு பரவி சுரப்பிகளின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்தி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துகிறது. நோய்வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும் நீடித்த ஆயுளும் உண்டாகிறது. அதன் மூலம் ஆன்மீகத் தோட்டத்தில் வெற்றி பெற்று நாம் இந்த மண்ணுலகுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சயம் நம்மை அடைவார்கள். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அந்த தொழிலிலே சிறப்பு. குடும்பத்திலே சிறப்பு மனதில் ஒரு அமைதி இவை எல்லாம் இந்தப் பயிற்சியில் கிட்டும்.

                உள்ளுற இயங்கி வரும் இறை சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் சக்தி பெற்று வளமாக வாழ்வீர்களாக.

குறிப்பு :
   நான் யார்எனஆத்ம இயல்பு நிலைஎன்ற நூலில் தன் இயல்பைப் பகுத்தறிவோம். ‘இயல்புணர்வுஎன்ற நூலில் இயற்கையோடியைந்த இயல்புணர்வைப் பயிற்சியில் விழிப்படைய செய்வோம். ‘இயல்பான சேவைஎன்ற நூலில் நடைமுறையில் உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தி இயல்புணர்வை தெளிவடைய செய்வோம். ‘இயல்பான ஏழாவது அறிவுஎன்ற நூலில் தெளிந்த இயல்புணர்வால் ஆழ்மனத்தில் உள்ள மெய்சிந்தனையை அறிய செய்வோம். ‘இயல்பு நெறிஎன்ற நூலில்... சென்டர்மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு தெளிவடைந்துஇயல்புதான் வழி, உண்மை, வாழ்க்கைஎன்று இப்பிறவியில் அடைய அயராது செயல்பட்டு இயல்பான் வாழ்வோம்.


    எஎஎயின் இயல்பான செயல்களில் ஒருங்கிணைவோம்!

    இயல்பான சேவையில் நிறைவடைவோம்!!

   இயல்புணர்வை விழிப்படைய செய்து இலக்கை
விரைந்து அடைவோம்!!!

    இந்த இயல்பான கருத்துக்களில் நிறைவு ஏற்பட்டால் இந்த புத்தகங்களை மூன்று நகலுக்கு மேல் எடுத்து அதை கொடுத்து கருத்தை பகிர்ந்து கொள்வதுதான் இயல்பான சேவையின் முதல் துவக்கம். 
(தன்னை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்

No comments:

Post a Comment