Monday, September 5, 2011

6. சமுதாயம்



6. சமுதாயம்


                ``சமுதாய உணர்வால் அனைவரும் மேன்மையாக வாழலாம்’’.

                தனிமனிதர்கள் ஒன்று கூடிக் குழுக்களாகவும், குழுக்கள் கூடி இனமாகவும், இனங்கள் கூடி மக்கள் கூட்டமாகவும், சமுதாய அமைப்பு உருவாகிறது. பேசும் மொழியால், செய்யும் தொழிலால், வாழும் குடியுரிமையால், உடல் நிறத்தால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். அதுபோல ஏற்றுக் கொண்ட, பின்பற்றுகின்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் மக்களை வகைப்படுத்தலாம்.

                ஒவ்வொரு மனிதனிடத்திலும் சமுதாய உணர்வை ஏற்படுத்திட வேண்டும். அனைவரிடத்திலும் அன்புணர்வு அமைய வழிவகை செய்ய வேண்டும்.

                சமுதாயம் என்பது எண்ணத்தால் சமாளிக்கப்படக் கூடிய ஒன்று அல்ல. அது உயிருள்ள ஒரு விஷயமாகும். சமுதாயத்தை மேம்படுத்திக் கொள்வது என்பது சமுதாயத்தைப் பற்றிப் பேசுவது மட்டும் அல்ல, இந்த வழி அல்லது அந்த வழியைப் பின்பற்றுவது. இவைதான், ஆனால் அந்தச் செயல்பாட்டில் நாம் உண்மையில் செய்து கொண்டிருப்பது என்னவென்றால் நாம் எதிலிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கிறோமோ அதையே மேலும் உறுதிப்படுத்திக் கொண்டும், வலிமைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றோம்.

                இந்தச் சமுதாயத்தில் கீழ்த்தரமான சிந்தனையால் `தனக்குத் தனக்கு என்று பெருவேட்டையில் ஒவ்வொருவரும் ஒழுங்கைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களின் தேவைப்பற்றிக் கவலைப்படாமல் முடிந்தவரை சுருட்டிக் கொள்ள முனையும் பொழுதுதான் மோதல், சிக்கல், பூசல், இடையூறு, துன்பம் எல்லாம் ஏற்படுகின்றன.

                இந்தச் சூழ்நிலையில் சமுதாயத்தில் எந்த நற்பயனும் விளையும் என்று நான் கருதவில்லை. மனத்தின் சிந்தனையில் மாற்றம் செய்து உண்மை நிலையை உணர்ந்து பிரச்சனைக்குத் தீர்வு காணும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

                சமுதாயமோ, மனிதகுலமோ தானாக உருவாக்கியுள்ள குழப்பத்திலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குள்ளேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள வரையில் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேவையிலிருந்து நீங்கள் விடுபட்டவுடன், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேவையும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

                உயரிய சிந்தனையால் சமுதாயத்தில் தன்னை உணர்ந்து இயற்கையின் ஒழுங்கை மீறாமல் எவ்வளவு தேவையோ அவ்வளவையும் பெற்றுக் கொள்ளலாம். ஒழுங்கு என்ற வரம்பு குலையாதிருந்தால் ஒவ்வொருவரும் பெறும் மிகுந்த அளவு பயன்கூட மற்றவர்கட்குத் தீங்கை ஏற்படுத்தாமலிருக்கும். இது அனைவரின் உள்ளத்தில் எழும்போது எப்படி வாழவேண்டும் என்று ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. வாழ வழிகாட்டுங்கள் என்று சமயவாதியிடம் போகத் தேவையில்லை; ஏமாறத் தேவையில்லை.

                சமுதாயத்தில் இதைச் செய்கின்றோம், அதைச் செய்கின்றோம் என்று சொல்லுகின்றனர். செய்வதாகச் சொல்வதை அவர்கள் செய்வதே இல்லை. இந்த மாதிரியான ஒன்றை நாம் எவ்வாறு நம்புகிறோம் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம். இந்த முழு ஏமாற்று விளையாட்டும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக வன்முறையும் மற்றும் செயல் முடக்கங்களை மிகுந்த அளவில் நாம் காண்கிறோம்.

                சமுதாய வளர்ச்சியால் இயற்கைக்கேற்பட்டுள்ள சீரழிவைச் சரிப்படுத்தி, நாம் இயற்கையின் ஆதார நிலைக்குத் திரும்பி அதன் அருள் மற்றும் வளத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். இச்சக்தி மட்டுமே நம்மைக் காக்க வல்லது. இச்சக்தி தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு புத்துயிர் பெற்று மிகுந்த ஆற்றலோடு செயல்படும். இந்தச் சமுதாய உணர்வால் உங்களையே அறிந்து கொள்ளவும், உங்களையே அனுபவித்து உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. இந்தச் சமுதாய உணர்வு அனைவரிடத்திலும் அமைவதால் எனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள எல்லோருக்குமானது அங்கே உள்ளது. சமுதாயத்தில் தட்டுப்பாடு எதுவும் இருக்காது.

                சமுதாயத்தில் முழுமையான சமநிலைப்பாட்டைக் காண வேண்டுமானால் இயல்பான அறிவின் சிந்தனையை மேம்பாட்டை அடையச் செய்ய வேண்டும். இந்த மனித முன்னேற்றம் வெறும் பொருள் வளத்தைச் சார்ந்ததாக மட்டுமே இராது. அது தர்மம், சத்தியம், அறம் என்ற இவற்றின் பொருட்டு ஏற்படும் ஒரு சமுதாயக் கட்டமைப்பாகும்.

                இயல்பான நிலையின் சீரிய சிந்தனையை நினைவில் வைத்துக் கொண்டிருந்தால்தான் இந்த சமுதாயத்தில் முழுத் தன்மையை நோக்கிச் செலுத்த முடியும். அந்தப் பேருண்மை என்னவென்றால் மனிதனுடைய ஆன்ம வாழ்க்கை ஒரு முடிவற்ற இடத்தில் இருந்து மற்றொரு முடிவற்ற இடத்திற்குச் செல்லுகின்றது. அதாவது ஆதியும் அந்தமும் அற்றது என்பதே அந்தப் பேருண்மை, இயல்பு நிலை என்ற ஒன்றே மனித முயற்சியின் முடிவான பயணம்.
                சமுதாய உணர்வை நீங்கள் உணர்ந்து செயல்படும்போது, உங்களுடைய உணரும் இயல்புணர்வு சுயமாக வளர்ந்து இயல்பை வெளிப்படுத்தும்.

                ``இயல்பான ஏழாவது அறிவின் உயரிய சிந்தனையால்  சமுதாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைக்குத் தீர்வுகாண வழி செய்கிறது. அதுபோல, நம் வாழ்வின் அமைப்பை, பிரச்சனைகளின் சரியான முடிவை இயல்புணர்வு மூலம் அறியலாம்’’.



No comments:

Post a Comment