Monday, September 5, 2011

3. பரிணாம வளர்ச்சி


3. பரிணாம வளர்ச்சி

                ``பரிணாம வளர்ச்சியின் முழு வடிவம் மனிதனாக வாழ்வதுதான்’’.

                பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியே பூமி. ஐம்பூதங்களின் பரிணாம வளர்ச்சியே உயிர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியே மனித இனம். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியே தன்னை உணர்ந்த மனிதன்.

                மனித பரிணாம வளர்ச்சி என்பது கற்காலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. வேட்டையாடி வாழ்க்கை நடத்திய மனிதன் இன்று அரசியல், பொருளாதாரம், ஆன்மீகச் சித்தாந்தங்கள் என வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறான்.

                இந்தப் பரிணாம வளர்ச்சியை உருவாக்க முடியாது. அது இயல்பான வழியில் உருவாகும். ஏனெனில் அதற்குப் பதிலும் இல்லை. எப்படி என்பது கிடையாது, எப்படி போக வேண்டும் எனில் அதுதான் ஒரே வழி தன்னை கடந்த கால சுமையிலிருந்து விடுவித்துக் கொள்வதால் எண்ணம் தன் இயல்பான லயத்தை அடைகிறது. எனவே பரிணாம முறையில் உருவாக்கப்பட்ட இயல்பான அறிவின் உருவம்தான் மனிதன். எனவே தான் ஒவ்வொருவரும் இயல்பான அறிவு வாய்ந்தவர்கள் என்கிறோம்.

                பரிணாமம் இல்லாமல் உங்களால் எதையும் அனுபவித்து உணரமுடியாது. உங்களுக்குத் தெரியாத ஒன்றை உங்களால் உணர முடியாது. பரிணாமம் தான் அனுபவத்தை உருவாக்குகிறது. பரிணாமம் அனுபவம், அறிதலை வலிமைப் படுத்துகிறது. நமது உயிர் வாழ்தலின், ஒவ்வொரு கணத்திலும், பரிணாம வளர்ச்சி இருக்கிறது. எனவே, பரிணாம வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில் மனிதன் இருக்கின்றான்.

                மனித இனம் பண்படுவதால் இறுதி நிலையை அடைந்துள்ளோம். இதனால் பரிணாமத்தின் சிறப்பிடம் வகிக்கிறோம். அச்சிறப்புக்குக் காரணம் மனம். உடல் நலனைக் காப்பது போலவே மனநலனையும் காக்க வேண்டும். மன வளர்ச்சிக்குத் துணையாவதற்கே உடல் இருக்கிறது. உடல், வளர்ச்சிக்கு ஒரு கருவி, மனவளர்ச்சி, அதன் பயன். மனித மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. அவ்வாற்றலைக் கொண்டு பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு மனிதன் செல்ல வேண்டும். இயற்கையின் இயல்பான இயக்கம் நீண்டகால இடைவெளிக்குப் பின் மனிதனை அடுத்த இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும். இது மன-உடல் ரீதியான ஒருங்கிணைப்பு நிலையில் நம் பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டம்.
                உயிர் வாழ்தலின் ஒவ்வொரு கணத்திலும் நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் நமக்குள்ளே என்ன நடக்கிறது என்பதையும் நாம் அறிந்தாக வேண்டும். இந்த பரிணாம கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கான ஒரே வழி இயல்பான நிலையை அறிய வேண்டும். இந்த முடிவான பயணத்தின் பழைய சுமைகளிலிருந்து விடுபட்டுத் தன்னை அறிய முடிகிறது.

                பரிணாமம் முடியும் தருவாயில் ஒரு நொடியில் அழிந்து திரும்பவும் புதிய பரிணாமம் துவங்கும். ஆனால் இயற்கை தனக்கே உரிய வழியில் மனித பரிணாமத்தின் இறுதிப் பொருளை வெளிக் கொணர்கிறது. இதன் பரிணாம வளர்ச்சி இலக்கை நோக்கிச் செல்ல செய்கிறது. இந்த இலக்கை அறிய ஒன்றை மாதிரியாக பயன்படுத்தி இன்னொன்றை உருவாக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதுதன் இயல்பான வழியில் உருவாக்குகிறது. இது நம்மிடம் உள்ள பரிணாமம் அற்ற இயல்பு நிலையை அறியச் செய்கிறது.

                பரிணாமத்தில் நிறைய விஷயம் இருக்கலாம். ஆனால் பரிணாமத்தின் கடைசிநிலை துவக்கம் நாம்தான். வேறு எந்த ஜீவராசிக்கும் இயல்புணர்வை உணரும் சக்தி கிடையாது. இந்த மனித பரிணாமத்தில் இயல்புணர்வை ஒருங்கிணைத்து, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.

                ``பரிணாம வளர்ச்சியின் முடிவான பயணம் தான் இயல்பான ஏழாவது அறிவின் இயல்பு நிலையை அடைய செய்வது, இதன் உருவம்தான் தன்னை அறிந்த மனிதன். இது மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சியை ஒரே பிறவியில் குறுக்கி அடக்கி விடுகிறது
.


No comments:

Post a Comment