Monday, September 5, 2011

8. ஏழாவது அறிவு




8. ஏழாவது அறிவு

                ``ஏழாவது அறிவைக் கொண்டு உயர்ந்த மனிதனாக வாழலாம்’’.

                மனிதன் ஆறாவது அறிவால் அறிந்ததைக் கொண்டு ஒழுக்கத்தால் உயர ஏழாம் அறிவு அவசியமாகிறது. ஏழாவது அறிவு என்பது புலன்களின் நுண்ணுணவர்வைப் பற்றியதாகும்.

                ஆறாவது அறிவின் சிந்தனைகளைத் தாண்டி ஏழாவது அறிவின் உயரிய சிந்தனையால் செய்ய முயலும் போது  இதனை உருவாக்க முடிகிறது. ஏழாவது அறிவில் அறிவுச் சார்ந்த விளைவுகளை உருவாக்கிப் பயன்படுத்தியாக வேண்டும். இது மனத்தின் நுண்ணுணர்வுகள், உணர்ச்சிகளின் நுண்ணுணர்வுகள் மூலம் மனிதனை ஆற்றல்மிக்க மனிதராக்குகின்றது. இது `உள்ளுணர்வுப் புரிதல்என்பதன் ஒரு புதிய உருவாக்கம் தான்.

                நமது சிந்தனையில் நம் உடம்பு இறுதியில் மண்ணுடன் மண்ணாகக் கலக்கப் போகின்றது என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் நினைவுப்படுத்தி ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தருவது தான் ஏழாவது அறிவின் துவக்கம்.
                சூரியக் கதிர்களை ஒருமுகப்படுத்தும்போது அதுமேலும் சூடுபெற்றுத் தீயாக மாறுகிறது. அதுபோல சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும் போதுதான் சிறந்த பயன் கிடைக்கிறது. உயரிய சிந்தனை நம்பிக்கையாக மாறும் போது சாதனைக்கான பல அதிசயங்கள் நிகழ்கின்றன. இதை கடுமையான முயற்சிகள் செய்து, உடல், மனம், உயிர் இவற்றை வருத்தி அமானுஷ்ய சக்தியை அடைகின்றனர்.

                இதை அறியாமையிலேயே பெறுகின்றனர், இது ஒரு உந்துதலினால் ஏற்படுகின்றது. இத் தொடர்புகள் யாவும் தமக்கு அப்பால் உள்ளவற்றை உணர்கின்றனர். அவற்றின் மிக உயர்வானது, விஞ்ஞான உணர்வுக்குத் (ளுரயீநசஅiனே) தன்னை நேராகத் திறந்து கொள்கின்றது. அது தன்னை மிஞ்சியுள்ள உண்மை உணர்வை, உணர்வால் அறிகிறது. அன்றியும் பரிணாமம் அடைந்துவரும் சீவனிலேயே இவ்வுணர்வின் பெருஞ்சக்திகள் தம்மை மறைந்து இருக்கும். இந்த விஞ்ஞான உணர்வும் இவ்வுண்மைச் சக்திகளும் கொண்டுள்ள இரகசிய ஒருங்கிணைப்புக்களே. இயற்கையில் இயல்பில் தங்குகின்றன. இதனால் மனத்தின் சக்தி அதிகரித்து அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. அவற்றின் வினைப் பயனே, ஒரு குறுகிய செயல்பாடே அரைகுறையான உருவங்களின் ஒரு கருத்துரு ஆகும்.

                ஏழாவது அறிவின் உண்மை நிலை வளமான வாழ்க்கைக்கு மிகத் தேவையான அறிவாகும். இது சிந்தனைகளை உயர்வடையச் செய்யாமல் ஆணவத்தை உண்டாக்குகின்றது. ஒரு பக்கம் லஞ்சம், ஏமாற்றுவது, அதிகாரம் என்று தர்மத்திலிருந்து நழுவிய மனநிலை, மறுபக்கம் கவலை, சோகம் இவற்றிலிருந்து தப்பிக்க, மறக்க மக்கள் சினிமா, டி.வி. மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம், இவைகள் எல்லாம் நோய் வாய்ப்பட்ட சிந்தனையின் புற அடையாளங்களாகும்.

                ஏழாவது அறிவுச் சிந்தனையைக் கொண்டு மனித இனத்தின் இலக்கை அடைய முயலுவது நமது நிழலையே நாம் பின்தள்ளிவிட்டு செல்ல விரும்புவது போல ஆகும். இது பயனற்றது. இது ஆறறிவு சிந்தனையைத் தாண்டியதாக ஏழாவது அறிவு இருக்கும். ஏழாவது அறிவால் பல அறிஞர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும், விஞ்ஞானிகளும் உருவாகியுள்ளனர். ஏழாம் அறிவு நம்பிக்கையாக மாறும்போது பல சாதனைகள், பல அதிசயங்கள் நிகழ்கின்றன.

                ஆறறிவு, ஏழாவது அறிவின் செயல்பாடுகளில் வேறுபாடுகள் குறைவு. ஆறறிவு ஆரம்ப அறிவினால் மனித இயல்புணர்வை அழித்து விடுகின்றன. ஏழாவது அறிவினால் இயல்புணர்வையும் மற்றும் மனத்தின் நுண்ணர்வையும் அறிவதன் மூலம் ஆற்றல் அதிகரிக்கின்றது. இதனால் தூரத்து மனதோடு தொடர்பு கொள்ளும் திறன் (கூநடநயீயவால) கிடைக்கிறது. இதன் ஆற்றலை அதிகரிக்க அதிகரிக்க எண்ணங்களிலும், உடலிலும் ஒரு சக்தி ஏற்படுகின்றது. அதன் உண்மை நிலையில் சக்தி மிக்க மனிதனாகின்றான்.

                ஏழாவது அறிவின் சக்தியால் நீ உன்னை மாற்றப் பார்க்கின்றாய். அது முடியவில்லை. எனவே, உலகத்தை மாற்றப் பார்க்கின்றாய். இது முயற்சியே தவிர ஒன்றுமேயில்லை. இந்தப் பிறவியில் மட்டுமே கிடைத்து உணரும் இயல்புணர்வால் இந்த சக்தி இயல்பாக கிடைக்கப் பெறும். இதுதான் உயர்ந்த நிலை. இதுவே ஆத்ம இயல்பு நிலையை அறியச் செய்யும்.

                ``இயல்பான ஏழாவது அறிவின் உண்மை நிலையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையான நோக்கம் நம்மிடம் உள்ள சக்தி மூலம் இயல்புணர்வை அறிவது, ஏழாவது அறிவின் உயர்ந்த நிலையாகும்’’

No comments:

Post a Comment