Monday, September 5, 2011

10. இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்பு


10. இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்பு


                ``உயிரும், உடலும், மனமும் பரிணாமடைந்து இயல்பாக வெளிப்படும். இயல்பான ஏழாவது அறிவின் நிலைப் பற்றிய விழிப்பை ஏற்படுத்துவதன் மூலம் குணாதிசய மாற்றமும் அதன் இயல்பும் உணர்ந்து நிறைவாக வாழலாம்’’.

                வாழவும்-வளரவும் துடிக்கும் ஒவ்வொருவரிடத்தும் தான் மாற வேண்டும் என்ற அவா உள்ளத்து தோன்றுவது என்பது உலகத்து இயற்கை. ஆனால் இயல்பான ஏழாவது அறிவின் மாற்றம் என்பது நிலத்தில் விளைகின்ற விளைபொருள் அல்ல; இல்லையேல் காசை இரைத்தால் கிடைக்கும் கடைச்சரக்கு அல்ல. முதலில் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

                இயல்பான ஏழாவது அறிவின் சிந்தனையை விவரித்தால் இப்போது நாம் காணும் இந்த உலகத்தை மாற்ற அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் புரிதலுக்கு உள்ளாக்குவதன் மூலமாகவே அது சாத்தியமாகும்.

                இன்னொரு வகையில் சொல்வதென்றால் பரந்த இந்த உலகத்தில் நாம் ஆறறிவைக் கடந்தவராக இருக்கிறோ மென்பதைத் தெரிந்து கொள்ள நமது அனுபவங்களின் அடிப்படையில் ஒரு மாறுதலான புரிதலுக்கு நம்மை உள்ளாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒருவிதமான மன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் நமது பார்வை நாம் இயல்புணர்வை உள்வாங்கிக் கொள்ளும் தகவலை நாம் எப்படி பொருள் படுத்திக் கொள்ளுகிறோம். மனிதர்களுடைய ஆழமான ஆற்றல் பிற உலகின் தூண்டுதலுக்கு உள்ளாகி, இயல்பான ஏழாவது அறிவின் புரிதலை நமக்கு தருகிறது. பிற உலகம் என்பது நம்முடைய ஆழ் மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது. ஆகவே, நம்முடைய இயல்பான ஏழாவது அறிவு என்பது நமது மனதின் துல்லியமானதும், உண்மையானதுமான இயல்புணர்வே என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

                ``இயல்பான ஏழாவது அறிவினால் மனிதர்கள் தங்களுடைய இயல்புணர்வால் மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்ளுவதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்’’.

                நம்மிடம் உள்ள மனித இயல்புணர்வை அனைவரும் அறிய வழிவகை செய்வதே இதன் நோக்கம். இதை விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களினத்தின் புலனுணர்விலும், உணர்ச்சியிலும் நுழைந்து சிந்தனைக்கும், வாழ்க்கைக்கும் ஓர் புது விளக்கம் அளிக்கிறது.

                ஒவ்வொரு உயிரினமும் ஒரு சிறப்புமிக்க இயல்புணர்வை பெற்றுள்ளன. உயிரினங்களின் இறுதி பரிணாம வளர்ச்சியான மனிதன், தன் சிந்தனைகளை உயரிய சிந்தனையாக்கி இயல்பான ஏழாவது அறிவை அறிந்து வாழ, ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். இதனால் நாம் யார் எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டு இருக்கின்றோம், எங்கே போக வேண்டும் போன்ற அனைத்திற்கும் விடையை பகுத்து உணரச் செய்து நம் இயல்புணர்வை அறிய செய்கிறது.

                உங்கள் இயல்புணர்வை நீங்கள் அறிய முடியாமல் இருக்கலாம். உங்கள் மனத்தையும் இதயத்தையும் மிகவும் நெருங்கி அலசிப் பார்ப்பீர்களானால், அது ஏன் அறிய முடியாமல் போயிற்று என்பதைக் கண்டறிவீர்கள், ஏன் அது உங்களிடம் அறிய முடியவில்லை என்பதைக் கண்டறிவதற்கான பேரார்வத்துடன் உயரிய சிந்தனை உங்களிடம் பிறக்குமானால் ஆத்ம இயல்பு தன்மை அங்கே இருப்பதை நீங்கள் அறிவீர்கள் முழுமையான உயரிய சிந்தனைகளே போரார்வத்தின் உச்சநிலை, இந்த முழுமையான உயரிய சிந்தனைகளால் இயல்புணர்வை அறியச் செய்கிறது. இதன் இயல்பு நிலையில் உலகினைச் சீர்தித்தவோ, சீரிய சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும். இந்நிலையில் இனிச் செய்தாக வேண்டியது அனைவருக்கும் இதைப் பற்றிய விழிப்பை ஏற்படுத்தவே ஆகும்.

                இதனால் ஒவ்வொருவரும் இயல்புணர்வுடன் செயல்பட முடிகிறது. முன்பு சடமாக இருந்த நாம் புலன் உணர்ச்சிகளை மட்டும் முக்கியமாகக் கொண்டு, மிருக குணங்களைப் பெற்றிருந்தோம். இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்புணர்வு நிலையை அறியும் மனிதர்களாக வளர்ந்திருக்கிறோம். நாம் மெதுவாக மனித நிலையிலிருந்து உயர்ந்து நிறைவான மனிதனாவோம். இது மனித இலக்கை அறியச் செய்கிறது. இந்த இயல்புணர்வு உங்கள் ஆழ்மனதை இயக்கி, அதன் மூலம் இயற்கை சக்திகள் இயக்கி இயல்பான ஏழாவது அறிவை அடையும் வழிவகைகளையும் உங்களுக்குள் அறிய தொடங்கும். இந்த விழிப்புணர்வின் விளைவாகத்தான் மாறுதல்களும், வெற்றிகளும் ஏற்படுகின்றன. இதன் அனுபவங்களிலிருந்து நீங்கள் பெறுகின்ற தகவல் அனைத்தும் இதன் மூலம் வடிக்கப்பட்டு உலகத்தைப் பற்றிய உங்களுடைய இயல்பு இயல்புணர்வை உணரச் செய்கிறது. இந்த விழிப்பை ஆழ்மனதுக்கு உருவாக்கி விட்டால், பிறகு உங்களாலும் அதை அலட்சியப்படுத்த முடியாது. ``இதைச் சொல்’’, ``அதைச் செய்’’ என்று ஆழ்மனம் உங்களுக்கு கட்டளையிடத் தொடங்கிவிடுமு;. மனித இலக்கை அடைவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும். இந்த விழிப்பால் மனிதன் தன்னை அறிந்து மற்றவர் களுக்குச் சேவை செய்து ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.

                இயல்பான ஏழாவது அறிவின் இயல்பான உயரிய சிந்தனைக் கொண்டு ஒத்த அம்சம் கொண்ட செயல்முறையை ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் செயல்முறையைப் பின்பற்றத் தேவையான விழிப்பு இல்லாவிடில் சமுதாயத்தில் பயனேது மில்லை. எல்லா வகையான சிறந்த உணவுகளையும் சமைக்கும் அறிவை நீ பெற்றிருக்கலாம். ஆனால் சமையலறைக்குச் சென்று உண்மையில் சில உணவு வகைகளையாவது சமைக்காவிடில் பயனேதுமில்லை. எனவே இந்த செயல்முறை உனக்குள் இருக்கிறது என்ற வெறும் சிந்தனையின் அறிவு உனக்கு உதாவது; நீ அதற்காக செயல்பட வேண்டும்.

                இதன் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த ... என்ற இயக்கம், குழுக்களாக ஒருங்கிணைந்து இயல்பான சேவை செய்யும் ஒரு தூய்மையான அமைப்பாகும். இது ஒரு ஆரோக்கியமான தேடுதல் ஆகும். மனித இயல்புணர்வின் ஆற்றலின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய விழிப்பு மகிழ்ச்சியும் திருப்தியும், நிறைவும் ஏற்பட வழிவகை செய்யும். இது பூரண சுதந்திரத்தை கொடுக்கும். இதனால் மனித நேயம், சகோதரத்துவம், அன்பு, தியாகம், நிறைவு ஏற்படச் செய்கிறது. இதனால் தன்னுடைய இயல்பான குணங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ளமுடியும். இதன் செயல்முறைகள், நடைமுறைகளைச் சமன் செய்கிறது. இதனால் நற்பண்புகளும், நல்லொழுக்கமும் மேலோங்கி இவற்றின் மதிப்பீடுகளை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. இதன் ஆற்றலால் எல்லா செயல்களும் சரியான வழியில் அறிந்து கொள்ள ஏதுவாகிறது.

                இயற்கையின் இயல்பான ஏழாவது அறிவின் இயல்பான இயக்கம் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மனிதனை அடுத்த பரிணாம நிலைக்கு கொண்டு செல்லும். முயன்றால் மனிதன் விரைவாக அடுத்த நிலையை எட்ட முடியும். இம்முயற்சி இயற்கைக்கு முரணானதன்று; இயற்கையின் இயல்பான வேகத்தில் சென்று பரிணாமம் காண்பதற்குள் மனித இனமே அழிந்திடுமோ என்ற அச்சம் சூழ்ந்துள்ளது. எனவேதான் இயல்பான ஏழாவது அறிவைக் கொண்டு அளப்பரிய ஆற்றலைக் கொண்டு விரைவாகப் பரிணாமம் பெற மனிதன் முயல வேண்டும். கிடைத்தற்கரிய இந்த மனிதப்பிறப்பில் தன் இயல்புணர்வால் இயல்பான ஏழாவது அறிவு வழியிலே தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

                இயல்பான ஏழாவது அறிவின், சாதனைகளைப் புரியவைத்து உயர்ந்த உண்மை நிலைக்கு அருகில் அழைத்துச் செல்கிறது. அது ஒரு கண்ணாடி போல உண்மை நிலையை பிரிதிபலிக்கிறது. அவை முடிவற்ற நிலையையும், முடிவுறும் நிலையையும் பிரதிப்பலிக்கின்றன. இது ஒரு வேளையில் உள்ள நீரில் எப்படி சூரியன் தெரிகிறதோ அவ்வாறு இயல்பான ஏழாவது அறிவில் முடிவற்ற நிலையில் உள்ள தொடர்பை அறியச் செய்கிறது. இதனால் இயல்பான ஏழாவது அறிவினால் ஏற்படும் மனோ-உடல் ரீதியான உட்தொடர்புகளையும் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. இது மனிதப் பரிணாம வளர்ச்சியில் மூளையின் உணர்வு நிலை அழைப்பிற்கும், ஆழ்ந்த நிலைக்கும் உள்ள தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியச் செய்கிறது. இந்த முறையில் உள்ளுணர்வு நிலையை விழிப்படையச் செய்து இயல்புணர்வை அறிந்து உணரச் செய்கிறது. இந்த இயல்புணர்வு மாற்றத்தால் ஆழ்மனத்தில் உள்ள சிந்தனைகளை வெளிப்படுத்து கிறது. இதன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் அளவிற்கேற்பவும் தடைகளைக் கடந்து தன்னைப் பற்றிய தெளிவு ஏற்படும். இதனால் புலணுணர்வு செயல்பாட்டின் வலிமை குறையும். அப்போது அது தன் சொந்த இயல்பான ஏழாவது அறிவு வழியில் செயல்பட ஆரம்பித்து இயல்பு நிலையை அறியச் செய்கிறது.
                ``தன்னுள்ளே தன்னை தேடுவதன் மூலம் தன்னுள் இயல்பான ஏழாவது அறிவை விழிப்படையச் செய்கிறது. இதனால் உண்மைகள் உணர்ந்து மனித இலக்கைப் பற்றிய துரித பயணத்தை மேலும் மேலும் அதிகரித்து பிறப்பின் நோக்கத்தை துரிதமாக அறியச் செய்கிறது’’.

இயல்பான ஏழாவது அறிவு மாற்றம் ஏற்படுத்துவதற்கான படிகள்:

                இயல்பான ஏழாவது அறிவு மாற்றத்தை நிகழ்த்த முனைகிற பொழுது எவ்வாறு அதனைச் செயலாக்கப் போகிறோம் என்பதில், இந்த நிலையில் ஒரு தெளிவான திட்டம் வேண்டும்.

1.            இயல்புணர்வால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்தல்.
2.            இயல்புணர்வால் விழிப்படையச் செய்யும் செயல் முறைகளும் பயிற்சிகளும்.
3.            இயல்பான ஏழாவது அறிவால் மாற்றத்திற்குரிய வழிமுறை களைத் தேர்ந்தெடுத்தல்.
4.            எத்தடை வந்தாலும், அதைத் தகர்ந்தெறிந்து எப்படியும் செயலாக்கியே தீருவேன் என்ற திடமான மன உறுதியும் அதற்காக முழுமையாக ஒப்புதல் கொடுத்தலும்.

                இவ்வாறான மேற் கூறப்பட்டவைகளை தவறாது தொடர்ச்சியாக மனதில் பதில்களை அறிந்து இயல்புணர்வோடு கைக் கொண்டால்தான் இயல்பான நெறியில் பீடு நடை போட முடியும்.

                நீங்கள் முழுமையாக ஒப்புக் கொடுக்கிறபொழுதுதான் உங்கள் வெற்றி ஊர்ஜிதமாகிறது. உங்களது வெற்றிக்கு, முழுப் பொறுப்பாளி நீங்களே! உங்களை நீங்களே ஒப்புக் கொடுங்கள்!




No comments:

Post a Comment