Monday, September 5, 2011

11. இயல்பு தியானம்


11. இயல்பு தியானம்

                ``நம்முடைய தனித்தன்மையான இயல்புணர்வை அறிவதற்கான ஒரு தேடுதலைத் தொடர்ந்து நடத்தப்படும் செயல்முறை பயிற்சி தான் இயல்பு தியானம். இதனால் ஆழ்மன அனுபவம் ஏற்பட்டு நமது வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட பல விஷயங்களை மாற்றி யமைத்து நமது இயல்பு நிலையை விரைந்து அறியச் செய்கிறது’’.

                இயல்பான ஏழாவது அறிவால் நமது உள்முக நம்பிக்கையை வளர்த்து இயல்புணர்வால் நம்மை நாமே அறியச் செய்கிறது. இயல்பு நிலையை அறிய பல பிறவிகளின் சுழற்சியின் இறுதியில் மானிடப் பிறப்பு கிடைத்துள்ளது. இயல்பான ஏழாவது அறிவின் தன் சிந்தனையின் பெருமளவில் முன்னேறுவதற்கான கருத் துருவாக்கம் இயல்பு தியானம் இது விரைவான பிரகாசமானதாயும், படைப்பாற்றலின் வெளிப்பாடாகவும், சந்தோஷமாயும், ஆனந்தமாகவும் அமையும்.

                தற்போது மிருகங்கள் எவ்விதம் நெருப்பின் பயன்பாட்டை அறியாதோ அதுபோலவே மனிதன் இயல்புணர்வைப் பற்றி சிந்தனை இருந்தும் அதன் பயன்பாட்டை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இயல்புணர்வு மேகமூட்டம் போல மறைந்து கொண்டு இருக்கின்றது. இயல்பு தியானம் மூலம் இயல்புணர்வை சுற்றியுள்ள கர்மவினையாகிய கருமேகங்களை அகற்றுகின்றது. மேலும் இயல்புணர்வின் விழிப்பை கூட்டுகிறது. இதனால் தங்கள் கண்ணோட்டம், எண்ணங்களின் தன்மை வாழ்க்கைப் பற்றிய அணுகுமுறை மாறுவதை உணர்வீர்கள் இதுதான் இயல்பு நிலையின் முதற்படி.

                மனித வாழ்க்கையில் மாறுபட்ட நிலைகளான அளவு கடந்த உற்சாம் அல்லது அளவுக்கு மிகவும் கீழான உற்சாகம், அளவு கடந்த தன்னம்பிக்கை (திமிர்) அல்லது அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை சரியாக நிர்வகித்து சமநிலையை அடைய செய்வதே இயல்பு தியானத்தின் குறிக்கோளாகும். இதனால் பலவீனங்களை கடந்து செல்ல முடிகிறது. மேலும் தேவைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது. உங்களால் உங்கள் மனத்தின் தன்மையை உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வின் தரத்தையும் உயர்த்த முடியும்.

                நாம் எதுவாக இருப்பதாக நாம் நினைக்கிறோமோ அதுவாக நாம் இல்லையென்பதைப் பற்றிய சிந்தனையை அது நமக்கு தருகிறது. நம்முடைய உண்மையான இயல்புநிலை குறித்து இந்த பௌதீக உலகிற்கு எதுவும் தெரியாது. முதலில் நம் ஒவ்வொருவருடைய உள்முக நம்பிக்கைகளையும் தேர்ந்தெடுத்து நாமே என்று நாம் அறிவோம். புதிய நம்பிக்கைகள் நமக்கு முழுமையான ஒரு வாய்ப்பைக் கொடுத்தன, குறிப்பாக மிகப்பெரிய அளவிலான ஒரு முன்னேற்றத்திற்கு உதவுகின்றது. நம்முடைய உள்முக நம்பிக்கைகளில் எவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும்? இதற்கு இயல்பு தியானத்தில் நம்மைப் பற்றிய தெளிவு இயல்பாக கிடைக்கிறது.

                பெரும்பாலானவர்கள், தாங்கள் சிந்திப்பதற்காக ஒரு மாயை நிலையில் இருக்கிறார்கள், வேறு வகையில் சொல்லுவதானால் அவர்கள் அறிவு ரீதியாகச் சிந்தனைகளை உருவாக்குவதாகச் சிந்தனை எப்படி உருவாகிறதென்று சொல்ல முடியவில்லை. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சிந்தனையில் செயல்முறையை கவனிக்கும் பொழுது அதன் படைப்பாளி நாம் அல்ல என்றும் வெறுமனே சிந்தனைகள் நம்முடைய இயல்புணர்வுகள் வாயிலாக உள்ளே வருவதையும், வெளியேறுவதையும் பார்க்கின்ற பார்வையாளர் களாக மட்டுமே இருக்கிறோம். இயல்புணர்வு வாயிலாக ஈர்க்கக் கூடியதாக அது இருந்து வருகிறது. அந்த தொடர்ச்சியான சிந்தனைகளை இயல்பு தியானம் மூலம் மேம்படுத்துவது சாலச் சிறந்தது.

                நாம் யாராக இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதைப் பொறுத்தே நாம் எந்த அளவுக்கு நம்மையே அறிகின்றோம் என்பது இங்குத் தெளிவுறும். அதுதான் நம்மைப் பற்றிய மையக் கருத்து அதுதான். நமக்குள் செயல்படும் ஒரு கிரியா ஊக்கியாகவோ அல்லது நம்முள்ளே செயல்படும் ஒரு கட்டுப்படுத்தியாகவோ இருக்கிறது. நாம் நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு மிகமிக முக்கியமான கோட்பாடாக இருக்கக்கூடியது. இந்த இயல்புணர்வுதான் நான் யார் என்று சிந்தித்து பார்க்கும் போது நம்முடைய மூளையிலுள்ள இயல்புணர்வுகள் பலவகைச் சாட்சிகள் ஒரு தொகுப்பாக இருக்கிறது. நாம் எந்த அளவுக்கு நம்மை நேசித்து கொள்கின்றோமோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உண்டாக்குகிறது. ஆகையால் நாம் எந்த அளவுக்கு நம்மை நேசிக்கின்றோமோ அந்த அளவிலிருந்து நமது இயல்புணர்வுகள் காட்சிகள் வெளியாகின்றன.

                நம்மைப் பற்றிய இயல்புணர்வின் மதிப்பீட்டை ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்கக்கூடிய நம்முடைய உணர்வுப் பகுதிதான் தானியங்கி முறையில் இயல்புணர்வு படிமத்தில் கட்டுப் பாட்டில் செயல்படுவது. நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் ஏற்றுக் கொண்டுள்ள வகையில் முக்கியத்துவப் படுத்தும் காட்சிகளைப் பொறுத்தே அது முழுமையாகச் செயல்படக் கூடியதாக இருக்கிறது. நம்முடைய ஒருங்கிணைந்த இயல்புணர்வுகள் நாம் யார் என்பதை வரையறை செய்கின்றன. அது இடைவிடாமல் கற்றுக் கொண்டும், மாறிக் கொண்டு இருக்கிறது. அது இன்னும் சிறப்பான நிலைமைக்கு தன்னை வளர்த்துக் கொள்வதற்கு என்றென்றைக்குமான ஒரு தேடுதலைத் தொடர்ந்து நடத்துகிறது. தியானம் மற்றும் ஆழ்ந்து சிந்தித்தல் போன்ற பயிற்சிகளின் ஊடாகத்தான் அது நிகழ்த்தப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவு வளர்ந்து, விரிவடைந்து, ஏற்கெனவே இருக்கும் எல்லைகளைக் கடக்கிறது. அப்போது நமது கண்களுக்கு எதிரில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உலகம் தெரியும். நாம் புதிய சிந்தனைகளைப் பெறுகிறோம், புதிய பொருள்களைப் பார்க்கிறோம், புதிய உணர்ச்சிகளை அனுபவிக்கிறோம். ஒவ்வொன்றுமே புதிய அர்த்தங்களை கொண்டிருக்கிறது. நாம் பார்க்கின்ற இந்தப் பொருள்களெல்லாம் உண்மையிலேயே ஏற்கெனவே இருந்து வருபவைதான். நம்முடைய வரையறை செய்யப்பட்ட சிந்தனைகளைக் கடந்து சென்று அவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த வகையில் நாம் ஒரு புதிய இயல்புணர்வு தன்மைக்கு நகர்ந்து செல்கிறோம். இன்னும் கூடுதலான ஆற்றலைப் பெற இயல்பு தியானத்தில் நம்முடைய உண்மையான இயல்புணர்வுத் தன்மையை வியக்கத்தக்க அளவில் அறியச் செய்து நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.

                இயற்கையின் இறுதி பரிணாமமாக மனித உருவில் உள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிணாமத்தில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அறிவின் மூலமாகத் தகர்ந்து வெளி வருகிறீர்கள். உங்களை நீங்களே உணர இயல்புதியானம் சிறந்தது. இயல்பு தியானம் என்பது நமது இயல்புணர்வையும் நம் மனதையும் நாம் மீண்டும் ஆழமாக பயிற்றுவிக்க செய்வதுதான். பின்வரும் பயிற்சியை கவனியுங்கள்.

                அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். மூன்று முறை ஓம் என்று மனதில் ஆழ்ந்து சொல்லி உள்ளுக்குள் செல்லுங்கள். அங்கு எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் தத் என்ற ஒலியால் இருப்பதாக உணருங்கள். மேலும் இயற்கையான நுட்பமான முறையில் ஒலி அதிர்வால் உள்ளுணர்வு மையங்களை ஒவ்வொன்றையும் விழிப்படையச் செய்து வலுப்படுத்த செய்யுங்கள். இந்த முறையில் கற்பகமாக உள்ள தெய்வீக ஆற்றலை நுட்பமான முறையில் இயற்கை ஒலி அதிர்வால் உங்கள் இதய கமலத்தில் உந்தப்படுகிறது. இதனால் ஆற்றல் புதுப்பிக்கப்பட்டு நல்வழிப்பாதையில் செல்ல உதவுகின்றது. இதன் இயற்கையான சூழல்களால் நமது சிந்தனைகள் உடலும், மனமும் ஓய்வு கொள்ளச் செய்கிறது. இதன் உருமாறிய நிலையில் நமது மெய் இயல்புணர்வை அறியச் செய்கிறது. இயல்பு நிலையை அறிவதற்கும், தெய்வீக ஞானம் பெறுவதற்கும் எளிய வழி மெய் இயல்புணர்வை விழிப்படையச் செய்வதேயாகும்.

                தெய்வீக ஒலியலைகளால் தலையிலுள்ள வெட்ட வெளியில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த ஒலிகளால் மெய்யுணர்வோடு மெய் இயல்புணர்வு ஈர்க்கப்பட்டு ஒலியே ஒளியாகிறது. இந்த நிலையில் மனம் வலிந்து வலுப்படுத்தப்படுகிறது. இயற்கை ஒலி அதிர்வுகளும், இயல்புணர்வும் இரண்டறக் கலந்து மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி ஆழ்மனத்தில் உள்ள மெய்சிந்தனையை அறியச் செய்கிறது. தொடர்ந்து பயிற்சியில் இந்த மெய்சிந்தனை இயல்புணர்வை மேலும் மேலும் விழிப்படையச் செய்து பிரபஞ்ச ஆற்றலுடன் ஒரு மெய் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அதீதம் முதிர்ந்த நிலையில் உள்ளானந்த ஒளி ஜீவனைத் அடையும்பொழுது ஆத்ம பேரொளியாக உடலில் பரவும் இப்போது நீங்கள் நிறைவை அறிவீர்கள். மிகுந்த ஓய்வு நிலை, மிகவும் சுகமான நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்புள்ள மகிழ்ச்சியான உணர்வை நீங்கள் பெறுவீர்கள். அமைதியும் ஒருங்கிணையும் இன்பம் உங்களைச் சூழ்ந்திருக்கும். மெய் சிந்தனைகளும், மெய் உணர்வுகளும் உங்களிடமிருந்து வெளிப்படும். நீங்கள் நிறைவாக இருப்பதை அறிவீர்கள். மெதுவாக கண்களைத் திறந்து கொள்ளுங்கள். குருவின் அருள் நிறைந்திருப்பதை உங்களுக்குள் அறிவீர்கள்.

                இயற்கையுடன் கூடிய இணைப்பை திருப்பவும் பெற இயல்பு தியானத்தில் மெய் இயல்புணர்வை ஆழ்மனத்தில் உள்ள மெய் சிந்தனைகளை அறிவதன் மூலம் அருள் சக்தியுமாய் பொங்கிப் பெருகி சுற்றிலுள்ள அனைத்தையும் உயர்வானதாக, நல்லதாக, குணப்படுத்தும் சக்தியுடையதாக மாற்றுகிறது. தினமும் காலை, மாலை 6.30 மணிக்கு தொடங்கி 6.51 வரை 21 நிமிடங்கள் மட்டுமே இயல்பு தியானம் செய்தல் வேண்டும்.




No comments:

Post a Comment